”ஒன்றே குலம் ஒருவனே தேவன்”
இது தமிழில் சொல்லப்படும் ஒரு முது மொழி. பாடசாலைகளில் ஆரம்ப வகுப்பில் போதிக்கப்படும் ஓர் அறிவு.
இது பொருள் கொண்டது வேற்று மொழிகளில் கூறப்படுகிறதா என்று ஆழமாகக் கூறமுடியாது. ஆனால், இது தமிழில் கூறப்படுவதுண்டு. அது மட்டுமன்று……
”கல் தோன்றா மண் தோன்றா காலத்தின் மூத்த மொழி தமிழ்” என்றும் தமிழுக்கு பெருமை சேர்க்கும் முகமாக கூறப்படுவதுண்டு.
இது தமிழுக்கு அதிமிஞ்சிய புகழ்ச்சிக்குரியது என்று கூறப்பட்டாலும், தமிழுக்கு ஏதோ, தற்போது வழக்கிலிருக்கும் ஏனைய மொழிகளைவிட பழமையுண்டு என்பதில் சந்தேகமில்லை.
ஏனெனில், ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது ஒரு தத்துவத்தைச் சொல்கிறது.
அத்தத்துவமும் பழமை வாய்ந்தது.
இவ்வுலகில் வாழ்ந்த, வாழும், வாழப் போகும் மனிதர்கள் அனைவரும் ஓர் இனமே. அவர்களில் பிரிவுகள் இல்லை. இம்மனிதர்களின் (இறைவன்) தேவன் ஒருவன்தான். அவர்கள் அனைவருக்கும் சொந்தக்காரன் ஒருவனான இறைவனே!.
அல்லாஹ் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்:
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; இன்னும், நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்;. (49:13)

இப்பூவலகில் மனிதர்கள் பல இனத்தவர்களாக பிரிந்திருந்தாலும் சில வேளைகளில் நாங்கள் எல்லோரும் ஓர் இனத்தவர்கள்தான் என்று ஓர் இறைவனின் பக்கம் ஒன்று சேரும் காட்சியையும் கண்ணூடாகக் காண்பதற்கு முடியாமலில்லை.
உ-மாக: வாகானங்களில் செல்லும் போது ஏதும் விபத்து ஏற்ப்பட்டால் அதில் இருப்பவர்கள் எந்த பல தெய்வக் கோட்பாட்டில் இருந்த போதும், எம்மொழி பேசினாலும், எம்மாதிரியான அமைப்பில், தோற்றத்தில் இருந்தாலும், திடீரென தங்களுடைய மனதிலிருந்து எவ்வார்த்தை வெளிப்படும்? தன்னைப்படைத்த ஓர் இறைவனையே அழைப்பார்களேயன்றி தாங்கள் வழிப்படும் தெய்வத்தை அழைக்கமாட்டார்கள். கடவுள் இல்லை என நாவால் கோஷமிடுபவர்கள் கூட ஓர் அதிர்ச்சி ஏற்பட்டால் அவர்களின் வாயிலிருந்து வரும் வார்த்தையும் அதுவாகத்தான் இருக்கும். ”O My GOD”"

ஆக, மனிதர்களுக்கு துன்பங்கள், கஷ்டங்கள், விபத்துக்கள் நேரும் போது மட்டும்தான் இம்மொழியின் அர்த்தத்தைப் புரிந்தவர்களாக செயற்படுகிறார்கள்.
மனிதர்கள் ஒரு குடும்பத்தவர்கள் என்பதும் அவர்களின் இறைவன் ஒருவன்தான் என்பதும் தங்களுக்கு துன்பம் ஏற்படும் போது மட்டும் ஏற்றுக் கொள்ளாது, எல்லா வேளையிலும் மனிதர்கள் ஓர் இணத்தவர்கள்தான், அவர்களின் இறைவன் ஒருவன்தான், பலர் அல்ல என புரிந்து நடக்க வேண்டும்.

0 மறுவினைகள் முதல் “”ஒன்றே குலம் ஒருவனே தேவன்””