بسم الله الرحمن الرحيم
عن أَبَي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ رَدُّ السَّلَامِ وَعِيَادَةُ الْمَرِيضِ وَاتِّبَاعُ الْجَنَائِزِ وَإِجَابَةُ الدَّعْوَةِ وَتَشْمِيتُ الْعَاطِسِ
ஒவ்வொரு முஸ்லிமும் அவரவரது உரிமையை எப்படி பெற்றுக் கொள்ள முயற்ச்சிக்கிறார்களோ அதே போன்று தாங்களும் மற்றவரது உரிமையை தருவதற்கும், மற்றவர்களுக்கு அதைப் பெற்றுக் கொடுப்பதற்கும் உதவியாக இருக்க வேண்டும். இருப்போமாக!!!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஷஷஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு நிறைவேற்ற வேண்டிய உரிமைகள் ஐந்து. ஸலாமுக்கு பதில் கூறுதல் (பிரிதொரு அறிவிப்பில்: ஸலாம் உரைத்தல்) நோயாளியை தரிசித்தல், ஜனாஸாவைப் பின் தொடர்தல், அழைப்புக்குப் பதிலளித்தல், தும்மியவருக்கு பதில் அளித்தல்.|| என அபூ ஹுரைரா (றழி)அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)
ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகள் என பலது உண்டு. இவற்றில் நாம் முக்கியமாக ஷஷஸலாத்துக்குப் பதிலளித்தல்|| என்பது பற்றி பார்ப்போம்.
இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் அவன் எவ்வினத்தைச் சேர்ந்தவனாகட்டும், தனக்கு நிம்மதி வேண்டும், அமைதி வேண்டும். என அலைந்து திரியும் இக்காலகட்டத்தில்,
பிரரைப் பற்றி சிந்திக்காதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஒருவன் தனது சகோதரனுக்கு உதவியாக இருக்காவிடினும் உபத்திரவமாக இருக்கக்கூடாது.
இங்கே, ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஸலாத்தைப் பற்றிச் சொல்கிறது. ஏன்?
அதுதான் மிக அவஷியம்!!.
தனக்கும் அதுதான் வேண்டும். மற்றவனுக்கும் அதுதான் வேண்டும்.
ஸலாம் கூறுதல்: எனும் போது, வெறுமனே ஒருவர் மற்றவருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் எனக் கூறினால் மட்டும் போதுமா?
ஸலாம் எனும் வார்த்தை பல பொருள்களைக் கொண்டுள்ளது.
அமைதி, சாந்தி, நிம்மதி என்பவைகளாகும்.
அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் ஷஅல்லாஹ் உங்களுக்கு சாந்தியும் சமாதானத்தையும் தரட்டும்” என அல்லாஹ்விடம் பிரார்த்தித்து முகமன் கூறுகிறான்.
அதனைக் கேட்ட ஒருவர், வஅலைக்குமுஸ்ஸலாம் எனக் கூறவேண்டும். உங்களுக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்” மீண்டும் அவரது வார்த்தையிலேயே பதில் அளிக்கிறார்.
ஏன்?
நீ எனக்கு எவ்வாறு நிம்தி தருகிறாயோ அவ்வாறே நானும் உனக்கு உன் நிம்மதியைக் கெடுக்க முன்வரமாட்டேன்.
ஆனால், இன்று ஸலாம் உரைப்பது என்பது வெறுமனே ஏனைய சமூகத்தினர் முகமன் கூறுவது போன்றே ஆகிவிட்டது.
இது, சாந்தி. சமாதானம், நிம்மதி வேண்டி பிரார்த்திக்கும் ஒரு முகமன்;. இது பெரியதொரு அர்த்தத்தையே உள்ளடக்கியிருக்கிறது என எத்தனை பேர் சிந்தித்து செயல்படுகிறார்கள்.????
தான், தனது சகோதரனுக்கு பிராத்தித்து முகமன் கூறினோமே, அப்பிரார்த்தனைக்கு ஏற்ப அவனுக்கு துன்பம் கொடுக்காமல் இருந்தோமா?
நிம்மதியைக் கொடுத்தோமா? என சிந்தித்தவர்கள் எத்தனை எத்தனை!!.
ஒருவன், மற்றவனது சோற்றில் கையடிக்கவென இப்பிரார்த்தனையைச் சொல்லியே கூட்டுச் சேருவான்.
உனக்கு சாந்தி உண்டாகட்டும், நிம்மதி கிடைக்கட்டும் எனக்கூறி உள்ளே நுழைந்து, இறுதியில் அவனது நிம்மதியைக் கெடுப்பவனாக மாறிவிடுகிறார்கள்.
இதில் படிக்காதவன் மட்டுமல்ல!!!!
இந்த ஹதீதையும், ஸலாம் என்றால் என்ன? என்ற பொருளையும் விளங்கியவர்கள் இவ்வாறு செயல்படும் போதுதான் மனதுக்கு மிகப் பெரும் வேதனை.
தொடரும்………….
0 மறுவினைகள் முதல் “நிம்மதி வேண்டி கூறும் முகமன்.”