ஒன்றே குலம் ஒருவனே (இரண்டாம் பாகம்)
இன்று இனவாதமட்டுமின்றி, வகுப்பு வாதங்களும் பிரிவினைவாதங்களும் போட்டி போட்டு நடை போட்டுக் கொண்டிருக்கிறது. ஊருக்கு ஊர் வேறுபாடு, நகரத்துக்கு நகரம் வேறுபாடு. நாட்டுக்கு நாடு, கண்டத்துக்கு கண்டம் எனபேதங்கள் ஏற்பட்டு எவன் சிறந்தவன் எனத் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சில கண்டத்தவர்களுக்கு ஆசியக் கண்டத்தைக் காட்டத் தேவையில்லை. அவர்களின் நினைப்பில் ஆசியக் கண்டத்தவர்கள் தங்களுக்குக் கீழ்ப்பட்டவர்கள்தான். வெள்ளையர்கள் கருப்பு இனத்தைக் கண்டால் உதட்டளவில் வைத்துக் கொண்டாலும் மனதளவில் வெறுக்கக்கூடியவர்களே. ஆங்கிலம் பேசுபவர்கள் வேற்று மொழி பேசுபவவர்களை ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். இதோடு நின்று விடுவதில்லை. இலங்கையைப் பொறுத்தமட்டில் மாகான ரீதியாக போட்டி. மேல் மாகாணத்தவர்களுக்கு கிழக்கு என்றாலே சலிப்பு. சிங்களம் பேசும் தமிழர்களுடன் தமிழில் பேசினால் அது ஏனோ ஓர் அறுவெறுப்போடு பார்ப்பார்கள். இவ்வாறுதான் இன்று பிரிவினைவாதங்களும், வகுப்பு வாதங்களும் பரவி தலைவிரித்தாடுகிறது.
தங்களுக்குள் பேதப்பட்டுக்கொள்பவர்கள், நம் எல்லோரையுமே பேறொரு கூட்டத்தினர் தரக்குறைவாக மதிக்கின்றனர் எனக் காவனிப்பதில்லை. கவலைப்படுவதுமில்லை. நாம் மற்றவர்களைவிட, நம் கூட்டத்தினர் மற்ற கூட்டத்தினரைவிட மதிக்கப்படுகிறோமா இல்லையா என்பதைக் கவனியாது தனக்கு கீழ் உள்ளவர்களிடம் மல்லுக்கு நிற்கின்றனர்.
இவ்வுலகில் பிறந்திருக்கும் ஒவ்வொரு மனிதனும், மனிதப் பண்புக்குள்ளாவன் எனப் பார்ப்பதில்லை. இனத்தால் வேறுபட்டாலும், குலத்தால் வேறுபட்டாலும், மொழியால், தேசத்தால் கண்டத்தால் வேறுபட்டாலும் மனிதன்தானே!!! ஏன் இதை எவரும் உணர்வதில்லை. எல்லோரும் மனிதன்தான் என ஒவ்வொருவரும் மதிக்க தெரிந்துவிட்டாலே இன மொழி தேசம் என பேதமின்றி வாழமுடியும். அங்கே சண்டை சச்சரவு உருவாவதற்கிடமில்லை.
இவன் இன்ன இனத்தவன் என்றுதான் பார்க்கிறான், மனிதன் எனப்பார்ப்பதில்லை. இவன் இன்ன நாட்டான் என்கிறான், மனிதன் எனப் பார்ப்பதில்லை. இன்ன மொழி பேசுகிறவன் என ஏளனமாக நினைக்கிறானேயொழிய, மனிதன் எனப் பார்ப்பதில்லை. இவ்வாறு தனது அந்தஸ்தையும், சுய கௌரவத்தையும்தான் பார்க்கிறானே தவிர மற்றவனும் மனிதன்தான் என மதிப்பதில்லை.
இவர்களும் என்னைப் போல் மனிதர்கள்தான் என ஒவ்வொருவனும் மதித்துவிட்டால் ஏன் இந்த பேதம்,? ஏன் வேற்றுமை? இறுதியில் ஏன் இந்தக் கொலைவெறி!!!. நாட்டுக்கு நாடு இனத்திற்கு இனம் என ஏன் வண்முறைகள், கொடூரம் நிறைந்த கொடுமைகள்?
இப்பேதங்களைவிட்டு, ஒவ்வொரு மனிதனும் மற்றவனை மதிக்கவும், மனிதர்கள் ஒரே சமுதாயமாக, மனிதன் மனிதனாக வாழவும் வலியுறுத்துவதே ஷஷஒன்றே குலம் ஒருவனே தேவன்|| என்கின்ற முது மொழி வாசகம். இதில் ஒருவனே தேவன் என்ற வார்த்தையை சிந்தித்து உணர்ந்தாலே ஒரே குலமாக மனிதர்கள் வாழ முடியும்!!!!
குடும்பமொன்று, அக்குடும்பத் தலைவனுக்கு எப்படியும் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும் என சிந்திப்பார்களெனில் அவர்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்படுமாயின் என்னதான் சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் இருக்கட்டும் பல வித்தியாசங்கள் வரட்டும் அக்குடும்பத்தில் பிளவுகள் ஏற்டாது. இரு நண்பர்களாக இருக்கிறார்களெனில் அவர்களுக்கு மத்தியில் பெரும் கருத்து முரண்பாடுகள் ஏற்படும், ஆனால் புரிந்துவணர்வு ஒன்று அவர்களுக்கிடையில் வளர்ந்திருப்பதால் பிரிவுக்கு வழிவிடாது ஒன்றுபட்டுநிற்கவே அப்புரிந்துணர்வு இடமளிக்கும்.
கடவுள் ஒருவன்தான் என ஒவ்வொரு சமுதாயமும் சிந்தித்துவிட்டார்களெனில் இனவேறுபாடு இருக்காது, தேச வேறுபாடு இருக்காது. நிற வேறுபாடு இருக்காது. மொழி வேறுபாடு இருக்காது. அமைப்பு, மற்றும் ஏழை எளியவன் பணக்காரன் என்ற வித்தியாசங்கள் வேறோடு அறுந்து போயிருக்கும். சோசலிசம் என்ற கட்சியொன்று இருப்பதற்கும் சாத்தியமில்லாமல் போய்விடும்.
கடவுள் ஒருவனே என்ற தத்துவம் கூறும் மனித ஒற்றுமை:
- கடவுள் ஒருவன் என்பதைக் காட்டும் வணக்க வழிபாடுகள்:
கடவுள் இருக்கிறான் என ஏற்றுக் கொண்ட எந்த சமுதாயத்திடத்திலும் அவர்களுக்கென்று (கடவுளை வழிபடவென) வணக்கஸ்தளங்கள் இல்லாமலிருக்காது. அதனால் அச்சமுதாயத்தில் பிளவுகள் இல்லாமல் இல்லையே??? என ஒரு கேள்வி கூட எழுலாம்.
இதற்கு இவ்வாறுதான் பதில் இருக்க முடியும்: அந்த சமூதாயத்தவர்களுக்கிடையிலாவது அனைவரும் ஒற்றுமையாய் ஒன்றாய் வாழ ஒரே கடவுளை வணங்குகிறார்களா?
கடவுளை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஒருவன் என துன்பம் வரும் போது கூறுவார்கள். விவாதம் என்று வரும் போது கூறுவார்கள். ஆனால் நடைமுறையில்?!!!!!
அச்சமுதாயத்தில் ஒரு கூட்டம் ஒன்றை வணங்கினால் மற்றொரு கூட்டம் தனக்கு இதுதான் விருப்பமெனக் கூறி வேறொன்றை தெய்வமாக வணங்குவார்கள். அவர்களில் பிரிதொரு கூட்டம் மூன்றாவதொன்றை வணங்காமலில்லை. இதனை நான் கற்பனையாகக் கூட கூறவில்லை. இதுதான் நடைமுறை.
பல தெய்வக் கோட்பாடு!! அச்சமுதாயத்தில் எல்லோரும் சேர்ந்து எல்லாவற்றையும் வணங்கினால் கூட ஒற்றுமையாகுவதற்கு சாத்தியமிருக்கிறது என ஒரு கதைக்குக்கூட எடுத்துக் கொள்ளலாமா என்றால் அதுவும் முடியாது. காரணம்ளூ நம்பிக்கை ஒரே ஒரு கடவுள்!! செயற்பாடு பல கடவுளர்கள்!!!!!
உ-மாக இந்துக்களை எடுத்துக் கொள்ளலாம். சிவனை வணங்கும் அதே கூட்டம் மாரியம்மனை வணங்குவதில்லை. மாரியம்மனை வணங்குபவர்கள் கண்ணனை வணங்குவதில்லை. முருகனை வணங்குபவர்கள் லக்சுமியை வழிப்படுவதில்லை. வாயளவில்ளூ இவர்கள் எல்லாம் எங்கள் தெய்வங்கள் எனக்கூறுவார்கள். எல்லோரும் எல்லாவற்றையும் வழிப்படுவதுமில்லை. அப்படி வழிப்பட்டாலும் எல்லாவற்றையும் ஒரே மாதரியான விருப்பத்துடன் வழிப்படுவதுமில்லை.
எனவே இவ்வாறு இருப்பவர்களிடம் ஒற்றுமையைஈ ஒருங்கினைப்பை எங்கிருந்தும் காணமுடியாது.
இவ்வாறே ஏனைய சமூதாயத்தவர்களிடமும் காணமுடிகிறது. கிறிஸ்தவர்கள் எனக் கூறுபவர்கள் வாய்க்கு வார்த்தையை வைத்துச் சொல்வார்கள். கிறிஸ்தவ சமுதாயம் என்பார்கள். அங்கும் பிரிவு. பைபளிலின் படி வழிப்படுதல், இயேசு மரியாள் என வழிப்படுதல் எனப் பிரிவுகள் உண்டு. (கிறிஸ்தவர்கள் தொடர்பாக தனித்தலைப்பில் வெளிவரும் அல்லா நாடினால்)
இப்படி எச்சமுதாயத்தை எடுத்தாலும் கடவுள் கொள்கையில் சரி கடவுளுக்கு செலுத்தப்படும் வணக்க வழிபாடுகளில் சரி ஓர் ஒருங்கினைப்பைக் காணமுடியாது.
ஆனால், இஸ்லாம் கூறும் எதிலும் மனிதர்கள் ஒன்றுபட வழியைக் காணமுடியும். வணக்க வழிபாடுகளில் எதுவாக இருந்தாலும் ஒருங்கினைப்பை வலியுறுத்துபவைகளாகத்தான் இருக்கின்றன.
இவ்வுலகில் வாழும் எம்முஸ்லிமும்; பிரி;ந்துவிடாதபடி ஒன்றினைக்கும் வணக்க வழிபாடுகள். (இதனை முஸ்லிம்களும் உணர்கிறார்களில்லை). உ-ம்: நாளாந்தம் நிறைவேற்றப்படும் தொழுகை, அல்லாஹ் என்கின்ற ஒரே கடவுளுக்காக ஒரே வடிவமைப்பாக நிறைவேற்றப்படுகிறது.
ஒருவர் எந்த மூளைமுடுக்குகளில் இருந்தாலும் அவ்வமைப்பில்தான் தொழுவார். அதில் உச்சரிக்கப்படும் வார்த்தை ஷஅல்லாஹு அக்பர்| (அல்லாஹ் மிகப் பெரியவன்), ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா (புகழ்ந்தவரை அல்லாஹ் செவியுற்றுவிட்டான்) அதில் ஓதப்படும் குர்ஆனிய வசனங்கள் அதிலும் குறிப்பாக ஆரம்பமாக ஓதப்படும் ஷஅல்ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்| எனத் தொடங்கும் அல்குர்ஆனின் ஆரம்ப அத்தியாயமான சூரதுல் பாதிஹா (தோற்றுவாய்). எங்கும் எத்தொழுகையிலும் இது மாறுபட மாட்டாது. ஏல்லாத் தொழுகையிலும் எம்மொழி பேசக் கூடியவராக இருந்தபோதும் அவ்வத்தியாயத்தையே உச்சரித்து ஓதவேண்டும்.
இவைகளுக்கு மேலாக தொழுகைக்காக அழைப்படும் அழைப்பொலி (அதான்) எங்கு சென்றாலும் எம்மொழி பேசுபவர்களாக இருந்தாலும் பயன்படுத்தும் அழைப்பொலி அல்லாஹு அக்பர்(4) (அல்லாஹ் மிகப் பெரியவன்), அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹ்(2) (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறொரு கடவுள் இல்லை என நான் சாட்சி கூறுகிறேன்), அஷ்ஹது அன்னமுஹம்மதர்ரஸூலுல்லாஹ்(2) (முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் எனவும் நான் சாட்சி கூறுகினே;), ஹய்ய அலஸ் ஸலாஹ்(2) (தொழுகையின் பக்கம் வாருங்கள்), ஹய்ய அலல் பலாஹ்(2) (வெற்றியின் பக்கம் வாருங்கள், அல்லாஹு அக்பர்(2) (அல்லாஹ் மிகப் பெரியவன்) லாஇலாஹ இல்லல்லாஹ்(1) (உண்மையாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறொரு கடவுள் இல்லை)
அதிகாலை நேரமாக இருந்தால் எங்கும் ஒரு வார்த்தை அதிகரிக்கப்படும். ஹய்ய அலல் பலாஹ் என்றதன் பின் ஷஅஸ்ஸலாது கைருன் மினன் நவ்ம்|(2) (தொழுகை தூக்கத்தைவிட சிறந்தது)
மற்றும், பள்ளியில் ஒன்று கூடிய மக்களை தொழ எழுந்திருக்கச் செய்வதற்காக எங்கும் எம்மொழி பேசுபவனும் ஷஹய்ய அலல் பலாஹ்| என்றதன் பின் கத் காமதிஸ் ஸலாஹ்(2) (தொழுகை தயாராகிவிட்டது) எனக் கூறுதல்
ஆக, அல்லாஹ் என்கிற ஒரே கடவுளை முன்நோக்கித் தொழும் இத்தொழுகை ஷஒன்றே குலம்| என்ற வசனத்திற்கு நேர் பொருள் தரும் பெரியதோர் உதாரணமாகும் என்றே எவரும் கூறலாம். ஒருவனே கடவுள் என்பதாலேயே ஷஒன்றே குலம்’ என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி புரிந்து கொள்ளலாம். மாறாக, பல தெய்வக் கோட்பாட்டில் இருப்போருக்கு குருக்கலாக இருந்து கொண்டு தெய்வம் ஒன்றுதான் தெய்வத்திற்கு உருவங்கள் இல்லை என்று உதட்டினால் கூறுவதையோ அல்லது தங்களது (லெட்டர் ஹெட்டில்) ஆரம்பத்தில் தலைப்பாக இடுவதையோ இது அர்த்தம் கொள்ளாது.
மனித சமுதாயம் ஒன்றுபட ஒரே கடவுள் கொள்கை:
ஒருவனால் படைக்கப்பட்ட மனித இனம்தான் பல பிரிவுகளுக்குள்ளாகி பிளவுபட்டிருக்கின்றது. இப்போது இவர்கள் ஒன்றுபட ஒரே ஒரு வழிதான் இருக்கின்றது. அதுதான் இஸ்லாம் காட்டும் கடவுள் கொள்கை.
மனிதப் படைப்பு:
மனித இனம் மட்டுமல்ல, இவ்வுலகில் நாம் காணும் ஒவ்வொன்றும் ஒரு கடவுளால்தான் படைக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு உதாரணமாக மனிதனை நோக்கலாம். மனிதர்களுக்கு ஏதும் துன்பங்கள் நேர்ந்தால் எவனாக இருந்தாலும், கடவுள் எனக் கூறி ஒன்றுபடுவதை கண்ணுடாக காணமுடிகின்றது என்று ஆரம்பத்தில் பார்த்தோம்.
மனிதன் இவ்வாறு ஒன்றுபடுகிறான் என்றால் காரணமென்ன? எச்சிந்தனையி;ல் துவண்டிருந்தாலும் அவன் இச்சக்தியை இந்நேரத்தில் ஏன் வேண்டுகிறான்? என ஒவ்வொரு மனிதனும் சிந்திப்பானாகில் அவனுக்கு பூரண வெளிச்சத்தைக் கொடுப்பது மனிதப் படைப்புத்தான்.
இம்மனிதப் படைப்பு அத்தனையும், ஏக இறைவனான ஒருவனால் தான் படைக்கப்பட்டிருக்க வேண்டும். பலரால் படைக்கப்பட்டிருந்தாலோ, அல்லது ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு சக்தி என்று வைத்துக் கொண்டாலோ எவ்வேளையிலும் ஒற்றுமை ஏற்பட சாத்தியமில்லை.
சிலர் இப்படைப்புக்களை இயற்கை எனக் கூறுவார்கள்?
இயற்கை என்றால் என்ன?
மனித சக்தியின்றி ஏதோ சக்தியால் இடம் பெறுவதே இயற்கை. மனித சக்திக்கு உட்பட்டு மனிதனால் ஏதோவொன்று செய்யப்பட்டிருக்குமானால் அது செயற்கை எனக் கூறப்படும். இவற்றில் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். இயற்கை என்றாலும், செயற்கை என்றாலும் சக்தியொன்றின் செயற்பாட்டின் மூலம்தான் உருவாக்கப்படுகிறது. ஆக, இவ்வுலகில் நாம் காணும் ஒவ்வொன்றும், ஒரு சக்தியின் யெலுக்கு உட்பட்டதாகும்.
இன்று விஞ்னான வளர்ச்சியி;ல் உதிர்ந்த ஒன்றுதான் தொழில் நுட்பங்கள். அவற்றில் கொம்பியூட்டர் என்ற சாதனத்தைவைத்து பலவிதமான ஆற்றல்களை மனிதன் வெளிக்காட்டி படைத்துக் கொண்டிருக்கின்றான்.
இன்றைய டீவியில் பல அறிவிப்புக்கள் இடம் பெறுகிறது. கார்டூனை வைத்தே தாங்கள் செய்யும் சேவையை பலர் வெளிப்படுத்துகின்றனர். பேனாவொன்று ஷஷதானாக தாளில் எழுதும் காட்சி||
நான் எனதறையில் நுழைந்தேன். இரவு நான் உறக்கத்திற்குச் செல்லும்போது எழுதி வைத்துவிட்டுச் சென்ற பேனா, அதே தாளில் எழுதிக் கொண்டிருந்ததை நான் காலையில் கண்டேன் என எவனாவது கூறினால் என்ன சொல்வோம்? உனக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை என்றுதான் கூறுவோமேயல்லாமல் அப்படி நடப்பதுதான் உண்மை எனக் கூற முடியுமா?
டீவியில் காண்பது உண்மை- அதாவது மனிதன் ஏற்றியதை வேறவர்கள் பார்கிறார்கள். மனிதன் செய்தது அது. அதே சமயம் தனத பேனா தானாகவே எழுதுகிறது என்றால் எவ்விதமான மனிதனும் நம்பமாட்டான்.
ஆக, இப்போது நாம் இயற்கையென்று சொல்வது ஏதோ ஒரு கச்தியால் உருவானவையே. இவற்றில் ஒன்றுதான் மனிதப் படைப்பு.
அவ்வாறே இம்மனிதப் படைப்பு தானாக உருவானதுமில்லை, இன்னும் ஒரு சக்தியால் அன்றி பல சக்தியால் படைக்கப்பட்டிருக்கவும் சாத்தியமில்லை.
ஒரே வகையான இயந்திரங்கள் பல கூட்டுக்காரார்களால் செய்யப்படுகின்றன. ஓர் இயந்திரம் பழுதுபட்டுப்போய்விட்டால் அவ்வியந்திரத்துக்குரிய பழுதடைந்திருக்கும் சாதனம்- அவ்வியந்திரத்தை தயாரித்த கொம்பெனியிலிருந்து வந்தவையாக இருந்தால் மட்டுமே அச்சாதனத்தைப் பொறுத்தி அவ்வியந்திரத்தை செயற்படவைக்க முடியும். மாறாக ஒரே வகையான இயந்திரம்தானே, பலதரப்பினர், இவர்களுக்கிடையில் எவ்விதத் தொடர்புமில்லாமல் அவ்வியந்திரங்களைச் செய்திருந்தால் ஒன்று பழுதுபட வேறொன்றின் சதனத்தை அதற்கு பயன்படுத்தி இயங்கவைக்க முடியாது.
அவ்வியந்திரங்கள் ஒரே கொம்பெனியில் தயாரிக்கப்பட்டிருந்தால் ஒன்றின் சாதனத்தை மற்றதிற்குப் பயன்படுத்தி இயங்கவைக்க முடியும்.
மனிதன் என்பவன் பல தரப்பாக பல அமைப்பாக, பல தேசத்தவனாக, இனத்தவனாக, பல் மொழி பேசக்கூடியவனாக (சாதி அடிப்படையில் இருப்பவர்களின் எண்ணப்படி) பல சாதிகளாக இருந்தபோதும் மாற்று சத்திர சிகிச்கை செய்தால் ஒருவனின் கிட்னியை அமேரிக்காவில் பிறந்து அங்கேயே வளர்ந்த ஒருவனின் கிட்னியை இலங்கையிலோ இந்தியாவிலோ பிறந்து வாழும் ஒருவனுக்கு மாற்று சிகிச்சை செய்தால் அம்மனிதன் இயற்கையாகவே இயங்கும் காட்சி.
ஒரு மனினுக்கு தேவைப்படும் இரத்தத்தை அம்மனிதனுக்கு எவ்வித்திலும் சம்பந்தமில்லாத மனிதனின் இரத்தத்தை ஊட்டினால் அவன் பெறும் இயக்கம்.
இவைகள் எமக்கு அள்ளித் தரும் படிப்பினைகள் யாது?
இவ்வுலகில் வாழும் மனிதர்களுக்கும் சொந்தக் காரன் ஒருவன்தான்.
ஒரு குடும்பத்தில் இருவருக்கிடையில், சண்டை என்று வந்துவிட்டால் தாங்க முடியாத வேதனை என்று விட்டாலும், இறுதியில் அவர்களுக்கிடையில் இனி பேச்சு இல்லை என்று வரும் போது சிலர் அவசரப்பட்டு சில வார்த்தைகளைப் பயன்படுத்திவிடுவர்.
நீ எனது சாவுக்கும் வரக்கூடாது||
அவன் செத்துவிட்டால், என்னதான் இருந்தாலும் அவன் நமது குடும்பத்தைச் சேர்ந்தவன், ஆத்திரப்பட்டு அப்படி பேசிவிட்டான் எனக்கூறி வந்தவனை ஆதரிக்காதவர்கள் ஒரு சிலரே.
ஒரே குலத்துக்கிடையில் பிரச்னை என்று வந்துவிட்டாலும், அக்குலத்தாரிடம் வேறொரு குலத்தான் சண்டைபோடுவதை பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். அவ்விடத்திலேயே தங்களது பகையை மறந்து ஒன்று சேர்ந்துவிடுவார்கள். இதனை நான் கற்பனையாகக் கூறவில்லை. இதுதான் யதார்த்தமும், உண்மையும், நடைமுறையும். இதற்கு மாற்றமாக விரல்விட்டு எண்ணப்படக் கூடியளவில் சிலர் எவன் வந்தால் என்ன எவன் சண்டை போட்டால் என்ன நமக்கு பாதிப்பு இல்லாத வகையில் நாம் இருந்துகொண்டால் போதும் என்று இருக்கலாம். இதனைப் பார்த்திருப்பவர்கள் கூறும் பதில்: மனிதாபிமானமற்றவர்கள்.
இவ்வொற்றுமை எதனைக் காட்டுகின்றது. குடும்பத்திற்குள் பிளவு ஏற்பட்டாலும், குலத்தில் பிரிவு ஏற்பட்டாலும் அவர்களுக்கிடையில் எப்படியாயினும் ஒற்றுமை வந்தே தீரும். ஏன்? தலைமைத்துவம் ஒன்று.
பிளவுபட்டு வாழும் இம்மனிதர்களுக்குள் இனத்துக்கு இனம் சண்டை போட்டுக் கொண்டால், இதற் எவ்வித சம்பந்தமும் இல்லாத பிரிதொரு கூட்டம், அல்லது பிரிதொரு இனம் கிளர்ந்தெழுகிறது. ஆகக் குறைந்ததுளூ தங்களது கருத்தையாவது கூற துணிந்துவிடுகிறது: மனிதாபிமானமற்றவர்கள்.
இவைகள் அத்தனையையும் ஒரு தத்துவத்தில் கூறுவதென்றால்: ஷஒன்றே குலம் ஒருவனே தேவன்| நீங்கள் எல்லோரும் ஒரு குலத்தவர்கள்தான். உங்கள் இறைவன் ஒருவன்தான்.
மனிதர்களுள் சண்டைகள் வரும். இறுதியில் நாங்கள் எல்லோரும் ஒருவனுக்கே உரித்தானவர்கள் எனும் போது அங்கே ஒற்றுமை உண்டாகின்றது.
அல்லாஹ்| எனும் பெயரால் ஓன்றினைதல்:
பல தெய்வக் கோட்பாட்டில் இருப்பவர்கள் தங்களின் கஷ்டமான வேளைகளில் தாங்கள் வழிப்படும் தெய்வங்களை அழைப்பவர்களல்ல. பொதுவாக கடவுள் என்றே அழைப்பார்கள் என முன்பு சுட்டிக் காட்டியிருந்தோம்.
ஒரே மதத்தில் இருக்கும் பல் மொழி பேசக்கூடியவர்கள் ஒரு சபையில் இருக்க நேரிட்டு ஷகடவுளே| என அவர்களின் பாசையில் அழைக்கும் போது அவர்களது மொழியே பிரிவை எடுத்துக் காட்டும். ஆனால் இஸ்லாம் சொல்லித் தரும் வார்த்தையைக் கூறும் போது, எம்மொழி பேசுபவனாயினும் இருக்கட்டும் அது மனிதர்கள் ஒரு குலமே என்ற தத்துவத்தை உணர்த்திக் காட்டும்.
முஸ்லிம்கள் என்போர் எவ்வமைப்பில், எவ்வுலகத்தில், எவ்வினத்தில், எத்தேசத்தில், எக்கண்டத்தில், எம்மொழி பேசுவனாக இருக்கட்டும், இவைகள் எல்லாவற்றையும் மறந்து அல்லாஹ் என மொழிந்து ஒன்றினையும் காட்சி.
கடவுள்|| என்ற வார்த்தையை தங்களது மொழிக் கேற்ப கூறும்போது அவர்களின் பேச்சிலேயே பிரிவை எடுத்துக் காட்டும். ஆனால், அல்லாஹ் எனக் கூறி அந்தக் கடவுளை அழைக்கும்போது கடவுளை அழைக்கும் பேச்சளவில்க்கூட மனித இனம் பிரிந்துவிடக் கூடாது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறதெனில், இதுவும் ஒன்றே குலம் ஒருவனே தேவன்|| என்பதற்கு அர்தத்தை, தத்துவத்தை நமக்கு எடுத்துவைக்கிறது.
ஒரே கடவுள் என்பதுமட்டுமல்ல, அக்கடவுளை அவனுக்குரிய பெயரைக் கொண்டே அழைக்க வேண்டும். இதனைத்தான் இஸ்லாம் எமக்கு வலியுறுத்துகின்றது.
ஒரேயொரு தலைவரின் மூலம் மனிதர்கள் ஒன்றினைதல்:
பிளவுகள், பிரிவுகள், பிரச்னைகள் என எங்கு பார்த்தாலும் அல்லல்படும் மனிதர்கள். ஏன்? காரணம் என்ன எனப் உற்றுப் பார்த்தால் தலைமைத்துவப் பிரச்னை. வழிகாட்டுபவர் ஒருவர் இல்லை. கணவன் மனைவி என்று மட்டும் இருந்தால்கூட அக்குடும்பத்திற்குள்ளும் பிரச்னை. ஏன்?
எம்மை வழிநடாத்த இத்தலைவரின் கண்கானிப்புப் போதும் என எவராக இருந்தாலும் ஏற்றுக் கொண்டுவிட்டால் அங்கே பிளவுகள் ஏற்பட சாத்தியமில்லை.
ஒரு சமுதாய மக்கள் அனைவரும் ஒருவனை தேர்ந்தெடுத்து இவர்தான் எங்கள் தலைவர் என முழுமையாக ஏற்றுக் கொண்டுவிட்டால், குடும்பம் இரண்டாகவோ, சமுதாயம் இரண்டுபடவோ, தேசமென்ன இவ்வுலகமே இரண்டுபடவோ சாத்தியமில்லாமல் போய்விடுகிறது.
அவ்வாறே இவ்வுலகத்தை ஆச்சிசெய்யும் ஒரு தலைவன் மக்களுக்கு எவ்வித துரோகமும் இழைக்காது எல்லா மக்களுக்கும் மத்தியில் சமத்துவத்தை, நீதத்தை நேர்மையை கடைப்பிடித்து நல் வழியில் மக்களை நடத்துகிறானெனில் அங்கே பிளவுகளுக்கு சாத்தியமில்லை.
இவ்வாறான ஒரு தலைமைத்துவத்தையே இல்லாம் அறிவித்து, ஒரு தூதரின் வழிகாட்டுதலின் பேரில் இச்சமுதாயம் செல்ல வேண்டும் என ஒரு தூதரை அறிவித்தது.
அத்தூதர் தனது வாழ்வில் அப்பழுக்கற்ற வாழ்;க்கையை வாழ்ந்தார் என வரலாறு பதித்துவைத்துள்ளது.
இத்தூதரது வாழ்கையே எனது வாழ்க்கையாகவும் அமைய வேண்டும் என ஒருவ்வொரு மனிதனும், மற்றும் அவர்களை தலைமை தாங்கும் தலைவனும் பின்பற்றுவார்களெனில் அங்கே ஷஒன்றே குலம் ஒருவனே தேவன்| என்பதை தத்துவர்த்துவமாக நிரூபித்துக் காட்டும்.
ஒரேயொரு தலைவரான முஹம்மத், ஒரே கடவுளான அல்லாஹ், ஒரேவிதமான வணக்க வழிபாடுகள்.
மார்கத்தால் ஒன்றினைதல்:
எம் அனைவரையும் படைத்த ஏக இறைவன் எம்மைப் படைத்து நீங்கள் செல்லும் பதையில் சென்றுவிடுங்கள் என்றொன்று இருந்தால் கூட இம்முது மொழி தோன்றுவதற்கு சாத்தியமில்லை. ஏன்? அவர்கள் ஒன்றுபட எவ்விதத்திலும் சாத்தியமில்லை.
மனிதர்கள் அனைவரும் ஒரு பாதையிலேயே செல்ல வேண்டும் என இறைவன் விரும்பினான். அவர்களுக்கு இஸ்லாத்தைத் தெரிவு செய்து இதுதான் அவர்களுக்கு உகந்தது, இவ்வழியில் தான் மக்கள் செல்லவேண்டும், அப்போதுதான் அவர்களுக்கு வெற்றி நிச்சயம் எனவும் அறிவித்தான்.
உலக மக்கள் ஒன்றினைய இஸ்லாம்தான் வழியா? வேறோரு மதத்தை தெரிவு செய்ய முடியாதா? எனக் கேள்வி எழலாம்.
மனிதர்கள் அனைவரும் ஒரே பதையில் ஒன்றினைய இஸ்லாம்தான் ஒரேயொரு பாதை என்பதற்கு பல காரணங்கள் உண்டு.
உலகத்தில் உள்ள அத்தனை மதங்களையும் எடுத்துக் கொண்டலும், அவைகளில் சிலது ஒரு குறிப்பிட்ட நாட்டை மட்டும் இனைத்ததாக, அல்லது சில மனிதர்களுடன் மட்டும் இனைக்கப்பட்டதாக இருக்கும்.
இதனால் உலக மக்கள் ஒன்றினைய வாய்ப்பில்லாமல் போய்;விடுகறது. மனிதன் பிளவுபட்டு நிற்பதற்குரிய முக்கிய காரணங்களை முன்னமே சுட்டிக்காட்டியிருக்கிறேன். குடும்பத்தை வைத்து, குலத்தை வைத்து, தேசத்தை வைத்து, கண்டத்தை வைத்து இனத்தை வைத்து பிளவுபடுகிறான். எனது இனம்தான் சிறந்தது. எங்கள் கண்டத்தவர்கள்தான் சிறந்தவர்கள், எங்கள் தேசம், எங்கள் தேசத்துடையவர்களே சிறந்தவர்கள். தனது இனத்தைதுயும், கண்டத்தையும், தேசத்தையும், மொழியையும் வைத்தே சிறந்தவன், சிறப்பில்லாதவன் என மனிதன் கணிப்பிடுகிறான். இவ்விடத்திலேயே மனிதப் பிளவுக்கு காரணங்கள் அமைந்துவிடுகிறது.
அவைகள் மட்டுமன்றி, எதனை எடுத்துக் கொண்டாலும் கடவுள் கொள்கையிலேயே அவர்கள் வேறுபட்டு நிற்கும் காட்சி. வழிபாட்டுக்கென்று ஒன்றும், தங்களுக்கு கஷ்டம் துன்பம் வரும் போது அழைப்படவென ஒன்றும். அச்சமுதாயம் வழிபாட்டுக்குரியவைகளை வைத்தே பிரிந்துவிடுகிறார்கள். அவர்களுக்குள் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு தெய்வம் என வேறுபாடு. தங்களுக்குள்ளேயே இவ்வேறுபாடுகள் என்றால் உலக மக்;கள் ஒன்றினைய சாத்தியமாகுமா? உலமக்கள் ஷஒன்றே குலம்|| அம்மக்களுக்கு ஒருவனே தேவன்| என்பதற்கு அர்த்தம் கொடுக்க முடியுமா?
ஆனால், இஸ்லாம் ஒன்றுதான் இனமோ, மொழியோ ஒரு குறிப்பிட்ட மனிதனையோ நாட்டையோ கண்டத்தையோ மட்டும் சேராது எல்லோருக்கும் உரித்தானதாக இருப்பதாக சுட்டிக் காட்டுகிறது. அது மட்டுமின்றி, ஒரே கடவுள் கொள்கையை சுட்டிக்காட்டுவதுடன் அல்லாஹ்தான் ஏக இறைவன் எனவும் அடித்துச் சொல்கிறது. ஷஒன்றே குலம் ஒருவனே தேவன்| எனபதற்கும் ஓர் அர்த்தத்தைத் தருகிறது.
ஆக, ஒருவனே தேவன், ஒரேயொரு மார்க்கம், ஒரேயொரு தூதர், ஒரேவிதமான வணக்க வழிபாடுகள்.
வேதத்தால் ஒன்றுபடல்:
இவ்வுலகில் உள்ள மதங்கள் அத்தனையும் தனக்கென்று வேதங்களை வைத்துக் கொண்டாலும் அவைகள் அதனையும் எக்காலத்துக்கும் பொறுத்தமானதாக இல்லை என எவராலும் கூற முடியும். அதனை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
அவ்வேதங்களில் சிலது ஓதப்படுவதற்கு மட்டும்தான் என்பதையும், சில வேதங்கள் சிலதைவிட்டு சிலது மட்டுமே செயற்படுவதற்கு உரியது என்பதையும் வெளிக்காட்டுகிறது.
ஆனால், இஸ்லாம் காட்டும் வேதமான அல்குர்ஆன், ஓh இறைவனான அல்லாஹ்வால் ஒருவருக்கு இறக்கப்பட்டது என்பதை மட்டும் காட்டாது எக்காலத்திலும் எல்லா மக்களாலும் எடுத்து இயம்புவதற்கு பொறுத்தமானதாக அறைகூவல் விடுகிறது.
இது ஏக இறைவனால் இறக்கப்பட்டதே தவிர மனிதர்களின் கையாடல்களுக்கு உட்பட்டதல்ல. சில குறிப்பிட்ட காலத்துக்கோ, ஒரு நாட்டுக்கு மட்டுமோ உரித்தானதாகவோ ஒரு தேசத்திற்கு, அல்லது கண்டத்திற்கோ, உரித்தானவையாக இல்லை. மாறாக எப்போதும் எல்லோருக்கும் பொறுத்தமானதாக அல்குர்ஆன் அறிவிக்கிறது. ஆக, இவ்வேதமான அல்குர்ஆனும் ஷஒன்றே குலம்| என்ற தத்துவத்தை வலியுறுத்தி மனிதர்கள் ஒன்றுபட வலிவகுக்கின்றது.
கடவுள் ஒருவன்தான், மார்க்கம் ஒன்றுதான், தலைவர் ஒருவர்தான், வேதம் ஒன்றுதான், வணக்க வழிபாடுகள் ஒரே விதமானவையே.
இவைகள் அனைத்தும், ஒன்றே குலம் ஒருவனே தேவன்| என வலியுறுத்துவது மட்டுமல்லாது அதற்கு பூரண அர்த்ததையும் கொடுக்கும் மார்க்கம் இஸ்லாம்தான் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அறிவிக்கிறது.
ஷஒன்றே குலம் ஒருவனே தேவன்| என்பது ஒரு முதுமை வாய்ந்த மொழி மட்டுமல்ல அது பழமை வாய்ந்த ஒரு தத்துவத்தையும் சொல்கிறது என முதல் அத்தியாயத்தில் பார்திருந்தோம். அவ்வாறே இஸ்லாம் கூறும் தத்துவங்களும் பழமை வாய்ந்தது என்பதை இஸ்லாத்தை ஆராயும் போது அறிந்துகொள்ள முடியும்.
